Andavar Padaitha vetriyin naalidhu
Indru agamagizhvom akkalippom
Alleluyaa paaduvom
Alleluyaa tholvi illai
Alleluyaa vettri undu (2)
1. Enakku udhavidum enadhu Aandavar
En pakkam irukkiraar (2)
Ulaga manidhargal enakku edhiraaga
Enna seiya mudiyum (2)
Tholvi illai enakku
Vetri pavani selvaen
Tholvi illai namakku
Vetri pavani selvom
2. Enadhu aatralum enadhu paadalum
Enadhu meetpumanar (2)
Needhimaangalin (koodaarathil) sabaigalile
Vetri kural olikkattum (2) – Tholvi
3. Thallappatta kal kattidam thaangidum
Moolaikkal ayitu (2)
Karthar seyal idhu adhisayam idhu
Kaithatti paadungalen (2) – Tholvi
4. Endrum ulladhu umadhu paeranbu
Endru paraisaatruvaen (2)
Thunba vaelaiyil nokki kooppittaen
Thunaiyaai vandheeraiyaa (2) – Tholvi
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
அல்லேலூயா பாடுவோம் (2)
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு (2)
1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
என் பக்கம் இருக்கிறார் (2)
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
என்ன செய்ய முடியும் (2)
தோல்வி இல்லை எனக்கு
வெற்றி பவனி செல்வேன்
தோல்வி இல்லை நமக்கு
வெற்றி பவனி செல்வோம்
2. எனது ஆற்றுலும் எனது பாடலும்
எனது மீட்புமானார் (2)
நீதிமான்களின் சபைகளிலே
வெற்றி குரல் ஒலிக்கட்டும் (2) – தோல்வி
3. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
மூலைக்கல்லாயிற்று (2)
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
கைத்தட்டிப் பாடுங்களேன் (2) – தோல்வி
4. என்றுமுள்ளது உமது பேரன்பு
என்று பறை சாற்றுவேன் (2)
துன்பவேளையில் நோக்கிக் கூப்பிட்டேன்
துணையாய் வந்தீரய்யா (2) – தோல்வி