WCF London Logo

World Christian Fellowship

எந்தன் நேசர் இயேசு நாதா

Enthan Naesar Yesu Naathaa

1. Enthan naesar Yesu naathaa
Ummil anbu kooruvaen
Ummil vaikkum aasaiyaalae
Paavam yaavum veruppaen
Ennai anbaai thedi vantheer
Ratham sinthi ratchitheer
Neer sei maa perum kirubaiyai
Naan oor pothum maravaen

Enthan naesar Yesu naathaa
Ummil anbu kooruvaen
Neer sei maa perum kirubaiyai
Naan oor pothum maravaen

2. Maaya loga vazhvil moozhgi
Pithanga thirithen
Theeya aasayil mayangi
Sindhai kettu alainthen
Satum deva baaayamindri
Thushtanai naal kalzhithen
Neero anbal ennai seethu
Undhan sonthamakineer

3. Ennamillaa en paavangal
Anaithaiyum manitheer
Parisutha aavi thanthu
Sathya paathai kaattineer
Maelum naer vazhi nadakka
Neer en munnae selghireer
Saa mattum nilaithu nirka
Um kirubai eegireer

4. Eni naan en vaal naalellaam
Ummaiyae pin selluvaen
Nandriulla saatchiyaaga
Um anbai prasthaabippaen
Saa mattum unthan thuthi
Endhen vaayil irukkum
Eetil ummodum vazhndhu
Nithyaanantham kolluven

1. எந்தன் நேசர் இயேசு நாதா
உம்மில் அன்பு கூறுவேன்
உம்மில் வைக்கும் ஆசையாலே
பாவம் யாவும் வெறுப்பேன்
என்னை அன்பாய் தேடி வந்தீர்
ரத்தம் சிந்தி ரட்சித்தீர்
நீர் செய் மா பெரும் கிருபையை
நான் ஓர் போதும் மறவேன்

எந்தன் நேசர் இயேசு நாதா
உம்மில் அன்பு கூறுவேன்
நீர் செய் மா பெரும் கிருபையை
நான் ஓர் போதும் மறவேன்

2. மாய லோக வாழ்வில் மூழ்கி
பித்தனாக திரிந்தேன்
தீய ஆசையால் மயங்கி
சிந்தை கெட்டு அலைந்தேன்
சற்றும் தேவ பயமின்றி
துஷ்டனாய் நாட் கழித்தேன்
நீரோ அன்பாய் என்னைச் சேர்த்து
உந்தன் சொந்தமாக்கினீர்

3. எண்ணமில்லா என் பாவங்கள்
அனைத்தையும் மன்னித்தீர்
பரிசுத்த ஆவி தந்து
சத்ய பாதை காட்டினீர்
மேலாம் நேர் வழி நடக்க
நீர் என் முன்னே செல்கிறீர்
சா மட்டும் நிலைத்து நிற்க
உம் கிருபை ஈகிறீர்

4. இனி நான் என் வாழ் நாளெல்லாம்
உம்மையே பின் செல்லுவேன்
நன்றியுள்ள சாட்சியாக
உம் அன்பை பிரஸ்தாபிப்பேன்
சாகு மட்டும் உந்தன் துதி
எங்கள் வாயில் இருக்கும்
ஈற்றில் உம்மோடு வாழ்ந்து
நித்யானந்தம் கொள்ளுவேன்

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram