1. Uyirinum melanathu Unthan peranbu
Enave padugiren En uyir irukum varai (2)
Umaithanae uruthiudan
Thinamum patri kondaen
Um nizhalil thane kalikornthu
Thinamum paadugiren
Unthan manathurukam
Thinamum thanguthaiya (2)
Potri potri pugalzhginten
Vazhthi vazhthi vanangugiren (2)
2. Pagalellaam paaduginten
Iravellaam thiyanikinten (2)
Yenguthaiya en idhayam
Thirumugam kaana vendum
Eppothu varuveeriyya
Ethirnokki odukiren
Um ninaivaal sogamanen
Epothu varuveeriyya (2)
3. Nerae en devan
Athigaalai thedugiren (2)
Um samoogam odi vanthen
Ithu thaane en virunthu
Um vasanam thiyanikiren
Athu thaane en marunthu
Maruroobamaganumae
Magimayil moozhganumae (2)
உயிரினும் மேலானது உந்தன் பேரன்பு
எனவே பாடுகிறேன் என் உயிர் இருக்கும்வரை (2)
உம்மைத்தானே உறுதியுடன்
தினமும் பற்றிக் கொண்டேன்
உம் நிழலில் தானே களிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
உந்தன் மனதுருக்கம்
தினமும் தாங்குதையா (2)
போற்றி போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகிறேன் (2)
2. பகலெல்லாம் பாடுகின்றேன்
இரவெல்லாம் தியானிக்கின்றேன் (2)
ஏங்குதையா என் இதயம்
திருமுகம் காண வேண்டும்
எப்போது வருவீரையா
எதிர் நோக்கி ஓடுகிறேன்
உம் நினைவால் சோகமானேன்
எப்போது வருவீரையா (2)
3. நீரே என் தேவன்
அதிகாலை தேடுகிறேன் (2)
உம் சமூகம் ஓடி வந்தேன்
இது தானே என் விருந்து
உம் வசனம் தியானிக்கிறேன்
அது தானே என் மருந்து
மறுரூபமாகனுமே
மகிமையில் மூழ்கனுமே (2)