Ootru thaneere enthan dheva aaviye
Jeevanadhiye ennil pongi pongi vaa (2)
Aasirvathiyum en nesa karthare (2)
Aaviyin varangalinaal ennai nirapum (2)
1. Kanmalaiyai pilanthu vananthirathile
Karthave um janangalin dhagamtherthere(2)
Pallathaakilum malaigalilum (2)
Thaner payum desathai neer vakkalithere(2)
2. Jeeva thaneeraam enthan nalla karthare
Jeeva ootrinaal ennai niraithidume (2)
Kani thanthida naan sezhithongida (2)
Kartharin karathil nitham ganam pettrida (2)
3. Ratchipin ootrugal enthan sabaithanile
Ezhumbida intha velai irangidume (2)
Aathma baaramum parisuthamum (2)
Aavaludan pettridave varam thaarume (2)
4 Thirakkapatadhaam ootru siluvaiyile
Ratchagarin kayangalil velipaduthe (2)
Paavakaraigal mutrum neengida (2)
Parisuthar samugathil jeyam pettrida (2)
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)
ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே (2)
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் (2)
1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே (2)
பள்ளத்தாக்கிலும் மலைகளிலும் (2)
தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே (2)
2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தரே
ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர் (2)
கனி தந்திட நான் செழித்தோங்கிட (2)
கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட (2)
3. இரட்சிப்பின் ஊற்றுக்கள் எந்தன் சபைதனிலே
எழும்பிட இந்த வேளை இரங்கிடுமே (2)
ஆத்ம பாரமும் பரிசுத்தமும் (2)
ஆவலுடன் பெற்றிடவே வரம் தாருமே (2)
4. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
இரட்சகரின் காயங்களில் வெளிப்படுதே (2)
பாவக்கறைகள் முற்றும் நீங்கிட (2)
பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட (2)