WCF London Logo

World Christian Fellowship

உம் பாதம் பணிந்தேன்

Um Paatham Paninthaen

Sis. Saral Navroji
சகோ. சாராள் நவரோஜி

Um Paatham Paninthaen
Ennalum Thuthiyae
Ummayanti Yaarai Paaduvaen – Yesayya
Unthan Anbu Ullam Ponguthae (2)

1. Parisithamae Paravasamae
Paranae Sarulae Varam Porulae (2)
Thedinathaal Kandadainthaen
Paadida Paadalgal Eenthalitheer (2)

2. Puthu Ennayaal Puthu Belathaal
Puthiya Kirubai Puthu Kaviyaal (2)
Nirappi Nitham Nadathuginteer
Noothana Salemil Serthiduveer (2)

3. Nerukathilae Ummai Alaithaen
Nerungi Uthavi Enakkalitheer (2)
Thisaikettengum Alainthidaamal
Theeviram Vanthennai Thaanguginteer (2)

4. En Mun Sellum Um Samugam
Enakku Alikkum Ilaipaaruthal (2)
Umathu Kolum Um Thadium
Unmayaai Ennayum Thettiduthae (2)

5. Kani Chedi Neer Nilaithirukkum
Kodiyaai Adiyaen Padarnthilanga (2)
Kilai Narukki Kalai Pidungi
Kartharae Kaathennai Sutham Seitheer (2)

6. En Ithaya Theivamae Neer
Enathu Iraivaa Aaruyirae (2)
Nesikkiraen Yesuvae Um
Nesa Mugam Entu Kandiduvaen (2)

7. Seerudanae Perudanae
Siranthu Jolikkum Kodumudiyil
Seekkiramaai Serthiduveer
Seeyonai Vaanjithu Naadugiraen (2)

உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப்பாடுவேன் – ஏசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே (2)

1. பரிசுத்தமே பரவசமே
பரனேசருளே வரம் பொருளே (2)
தேடினதால் கண்டடைந்தேன்
பாடிட பாடல்கள் ஈந்தளித்தீர் (2)

2. புது எண்ணெய்யால் புது பெலத்தால்
புதிய கிருபை புது கவியால் (2)
நிரப்பி நிதம் நடத்துகின்றீர்
நூதன சாலேமில் சேர்த்திடுவீர் (2)

3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன்
நெருங்கி உதவி எனக்களித்தீர் (2)
திசைக் கெட்டெங்கும் அலைந்திடாமல்
தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் (2)

4. என் முன் செல்லும் உம் சமூகம்
எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் (2)
உமது கோலும் உம் தடியும்
உண்மையாய் என்னையும் தேற்றிடுதே (2)

5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும்
கொடியாய் அடியேன் படர்ந்திலங்க (2)
கிளை நறுக்கி களை பிடுங்கி
கர்த்தரே காத்தென்னை சுத்தம் செய்தீர் (2)

6. என் இதய தெய்வமே நீர்
எனது இறைவா ஆருயிரே (2)
நேசிக்கிறேன் இயேசுவே உம்
நேசமுகம் என்று கண்டிடுவேன் (2)

7. சீருடனே பேருடனே
சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் (2)
சீக்கிரமாய் சேர்த்திடுவீர்
சீயோனை வாஞ்சித்து நாடிடுவேன் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram