WCF London Logo

World Christian Fellowship

உன்னையன்றி வேறே கெதி

Unaiyanti Vaerae Kethi

Unaiyanti vaerae kethi
Oruvarillaiyae suvaamy
Thanaye baliyai thantha
Mannuyir retchaganai (2)
Annai thanthai uttar suttar
Aarumuthavuvaro
Athisaya manuvaelaa
Aasai en yaesu suvaamy

1. Pannina thurogamellaam
Enninaa lethanaikoti
Paathagathu kundoo ellai
Parathavithaenae thaedi (2)
Kanninalun thiruvadi
Kaana naan thagumothaan
Kadaiyanukkarulpuri
Madiyumun yaesu suvaamy

2. Anjiyanji thoora ninten
Sanjalangalai naan solli
Alaikadal thurumbupola
Malaivu konndae naanaiyo (2)
Kenji kenji koovumintha
Vanjagan mugambarai
Kitti ennidam sernthu
Krubaivai yaesu suvaamy

3. Ethanai kattalum thaeva
Bakthiyaethu matta paavi
Evvalavu puthikaettum
Avvalavukkathi thoshi (2)
Pithanai pola pithatti
Kathiyae pulambumaelai
Paethaiyai kadaithaetti
Pilaikkavai yaesu suvaamy

4. Kallanaam kabadanennai
Thallivittalaavathenna
Kallaippol kadinangonda
Karma sandaalan paalum (2)
Ullamunkarainthe untan
Uyar siluvaiyinanpaal
Ulaiyilitta melugaay
Urugavai yaesu suvaamy

உன்னையன்றி வேறே கெதி
ஒருவரில்லையே ஸ்வாமீ
தன்னையே பலியாய் ஈந்த
மன்னுயிர் ரட்சகனை (2)
அன்னை தந்தை உற்றார் சுற்றார்
ஆருமுதவுவரோ
அதிசய மனுவேலா
ஆசை என் யேசு ஸ்வாமீ

1. பண்ணின துரோகமெல்லாம்
எண்ணினா லெத்தனைகோடி
பாதகத்துக் குண்டோ எல்லை
பரதவித்தேனே தேடி (2)
கண்ணினாலுன் திருவடிக்
காண நான் தகு மோதான்
கடையனுக்கருள்புரி
மடியுமுன் யேசு ஸ்வாமீ

2. அஞ்சியஞ்சித் தூர நின்றென்
சஞ்சலங்களை நான் சொல்லி
அலைகடல் துரும்புபோல
மலைவு கொண்டே னானையோ (2)
கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த
வஞ்சகன் முகம்பாராய்க்
கிட்டி என்னிடம் சேர்ந்து
க்ருபைவை யேசு ஸ்வாமீ

3. எத்தனை கற்றாலும் தேவ
பக்தியேது மற்ற பாவி
எவ்வளவு புத்திகேட்டும்
அவ்வளவுக்கதி தோஷி (2)
பித்தனைப் போல பிதற்றிக்
கத்தியே புலம்பும் ஏழை
பேதையைக் கடைத் தேற்றிப்
பிழைக்கவை யேசு ஸ்வாமீ

4. கள்ளனாம் கபடனென்னைத்
தள்ளிவிட்டாலாவதென்ன
கல்லைப்போல் கடினங்கொண்ட
கர்ம சண்டாளன் பாழும் (2)
உள்ளமுங்கரைந்தே உன்றன்
உயர் சிலுவையினன்பால்
உலையிலிட்ட மெழுகாய்
உருகவை யேசு ஸ்வாமீ

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram