WCF London Logo

World Christian Fellowship

ஆறுதலின் தெய்வமே

Aaruthalin Theyvamae

எஸ். ஜே. பெர்க்மான்ஸ்
Fr. S. J. Berchmans

Aaruthalin theyvamae
Ummudaiya thiru samoogam
Evvalavu inbamaanathu - Aaruthalin

1. Ummudaiya sanithiyil thangiyirupor
Unmaiyilae bakiyavangal (2)
Thooya manathudan thuthipargal (2)
Thuthithu kondirupargal – Aamen

2. Ummilae belan kollum manithargalellaam
Unnmaiyilae bakkiyavangal (2)
Odinalum kalaipadaiyar (2)
Nadanthalum sorvadaiyar -Aamen

3. Kaneerin pathaiyil nadakum bothellaam
Kalipaana neerootai maatri kolvargal (2)
Vallamai maelae vallamai kondu (2)
Seeyonai kanbargal -Aamen

4. Vaeridathil aayiram naal valvathai vida
Ummidathil oru naal maelanathu (2)
Ovoru naalum umathu illathin (2)
Vaasalil kathirupaen – Aamen

5. Aaththuma thevanae umaiyae Nnoki
Aarvamudan katharukintathu (2)
Ullamum udalum ovorunalum (2)
Kemberithu sathamiduthu – Aamen

ஆறுதலின் தெய்வமே
உம்முடைய திருச்சமூகம்
எவ்வளவு இன்பமானது - ஆறுதலின்

1. உம்முடைய சந்நிதியில் தங்கியிருப்போர்
உண்மையிலே பாக்கியவான்கள் (2)
தூய மனதுடன் துதிப்பார்கள் (2)
துதித்துக் கொண்டிருப்பார்கள் – ஆமென்

2. உம்மிலே பெலன் கொள்ளும் மனிதர்களெல்லாம்
உண்மையிலே பாக்கியவான்கள் (2)
ஓடினாலும் களைப்படையார் (2)
நடந்தாலும் சோர்வடையார் – ஆமென்

3. கண்ணீரின் பாதையில் நடக்கும்போதெல்லாம்
களிப்பான நீருற்றாய் மாற்றிக்கொள்வார்கள் (2)
வல்லமை மேலே வல்லமை கொண்டு (2)
சீயோனைக் காண்பார்கள் – ஆமென்

4. வேறிடத்தில் ஆயிரம் நாள் வாழ்வதைவிட
உம்மிடத்தில் ஒரு நாள் மேலானது (2)
ஒவ்வொரு நாளும் உமது இல்லத்தின் (2)
வாசலில் காத்திருப்பேன் – ஆமென்

5. ஆத்துமா தேவனே உம்மையே நோக்கி
ஆர்வமுடன் கதறுகின்றது (2)
உள்ளமும் உடலும் ஒவ்வொரு நாளும் (2)
கெம்பீரித்து சத்தமிடுது – ஆமென்

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram