1. Thandhaanai thudhipomae – thiru
Sabaiyaarae kavi – paadi paadi
Vindhaiyaai namakkanandhanandhamaana
Villarkariyadhoar nanmai miga miga (2)
2. Oyyaarathu seeyonae – neeyum
meiyaaga kalikoorndhu naerndhu
Iyanaesukunin kaiyai kooppi thuthi
Seiguvaiyae magizh kolluvaiyae naamum (2)
3. Kannaara kalithaayae – nanmai
Kaatchiyai kandu rusithu pusithu
Ennukkadangaadha ethanaiyo nanmai
innumunmer sona maripor peidhumae (2)
4. Suthaangathu narsabaiyae – unai
Mutraai kollavae alaindhu thirindhu
Sathu kulaindhunai sakthiyaakka thamin
Rathathai sindhiyeduthae uyir varam (2)
5. Dhooram thirindha seeyonae – unai
Thookkiyeduthu karathinilaendhi
Aarangal pootti alangarithu ninai
Athan manavaatti yaakkinadhu ennai (2)
6. Singaara kannimaarae – um
Alangaara kummi adithu padithu
Mangaadha um manavaalan yaesudhanai
Vaazhthi vaazhthi aethi panindhidum (2)
1. தந்தானைத் துதிப்போமே – திருச்
சபையாரே கவி – பாடிப்பாடி
விந்தையாய் நமக்கனந்தனந்தமான
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிக (2)
2. ஒய்யாரத்துச் சீயோனே – நீயும்
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி
செய்குவையே மகிழ் கொள்ளுவையே நாமும் (2)
3. கண்ணாரக் களித்தாயே – நன்மைக்
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை
இன்னுமுன்மேற்சோனா மாரிபோற்பெய்துமே (2)
4. சுத்தாங்கத்து நற்சபையே – உனை
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து
சத்துக் குலைந்துனைச் சக்தியாக்கத் தம்மின்
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் (2)
5. தூரம் திரிந்த சீயோனே – உனைத்
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நின்னை
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! (2)
6. சிங்காரக் கன்னிமாரே – உம்
அலங்காரக் கும்மி அடித்துப் படித்து
மங்காத உம் மணவாளன் இயேசுதனை
வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் (2)