1. Thiri muthal kirubasananae, saranam!
Jega thala ratchaga thaevaa, saranam!
Thinam anuthinam saranam – kadatchi!
Thinam anuthinam saranam – saruvaesaa!
2. Nalam valar aega thirithuvaa, saranam!
Namaskari umbargal naathaa, saranam
Nambinaen ithu tharunam – tharunam
Nambinaen, thinam saranam – saruvaesaa!
3. Aruvuruvae, arularase, saranam!
Antu mintu mentum ullaay saranam!
Athigunanae tharunam – kiranamolir
Arul vadivae saranam – saruvaesaa!
4. Ulagida maeviya unathaa, saranam
Or kirubaasana oliyae, saranam!
Oli arulvaay, tharunam – manuvork
Uthamanae, saranam – saruvaesaa!
5. Nithiya thothira nimalaa, saranam!
Nithi isravaelarin athibathi, saranam!
Naathaa, ithu tharunam – kirubaikkoru
Aathaaraa saranam – saruvaesaa!
1. திரி முதல் கிருபாசனனே, சரணம்!
ஜெக தல ரட்சக தேவா, சரணம்!
தினம் அனுதினம் சரணம் – கடாட்சி!
தினம் அனுதினம் சரணம் – சருவேசா!
2. நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்!
நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம்
நம்பினேன் இது தருணம் – தருணம்
நம்பினேன், தினம் சரணம் – சருவேசா!
3. அருவுருவே, அருளரசே, சரணம்!
அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்!
அதிகுணனே தருணம் – கிரணமொளிர்
அருள் வடிவே சரணம் – சருவேசா!
4. உலகிட மேவிய உனதா, சரணம்
ஓர் கிருபாசன ஒளியே, சரணம்!
ஒளி அருள்வாய், தருணம் – மனுவோர்க்
உத்தமனே, சரணம் – சருவேசா!
5. நித்திய தோத்திர நிமலா, சரணம்!
நிதி இஸ்ரவேலரின் அதிபதி, சரணம்!
நாதா, இது தருணம் – கிருபைக்கொரு
ஆதாரா சரணம் – சருவேசா!