Uyirthelunthare Alleluia
Jeyitheluntharae
Uyirudan Eluntha Meetpar Yesu
En Sonthamanaarae (2)
1. Kallarai Thiranthidavae
Kadum Sevagar Bayanthidavae (2)
Vallavar Yesu Uyirtheluntharae
Valla Pithaavin Seyalithuvae (2)
2. Marithavar Mathiyilae
Jeeva Thaevanai Thaeduvaaro (2)
Neethiyin Athibathi Uyirthelunthaarae
Nithiya Nambikai Perugiduthae (2)
3. Emmaa Oor Seeshargalin
Ellaa Mana Irul Neekinaarae (2)
Emman Kalakangal Neekinathalae
Ellaiyilla Paramaananthamae (2)
4. Maranamun Koor Engae
Paathaalamun Jeyamengae (2)
Saavaiyum Noyaiyum Paeyaiyum Jeyithaar
Sabaiyorae Thuthi Saattiduvom (2)
5. Aaviyaal Intum Entum
Aa Emmaiyum Uyirpikkavae (2)
Aaviyin Acharam Emakalitharae
Allaelooyaa Thuthi Saatiduvom (2)
6. Parisutha Maaguthalai
Payathodentum Kaathu Kolvom (2)
Ekkaalam Thonikaiyil Maruroobamaga
Elumbuvomae Magimaiyilae (2)
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே (2)
1. கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே (2)
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே (2)
2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ (2)
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே (2)
3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே (2)
எம்மனக் கலக்கங்கள் நீங்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே (2)
4. மரணமுன் கூர் எங்கே
பாதாள முன் ஜெய மெங்கே (2)
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம் (2)
5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே (2)
ஆவியின் அச்சாரம் எனக்களித்தாரே
அல்லேலுயா துதி சாற்றிடுவோம் (2)
6. பரிசுத்தமாகுதலை
பயத்தோடென்றும் காத்துக்கொள்வோம் (2)
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே (2)