WCF London Logo

World Christian Fellowship

கர்த்தாவே என் பெலனே

Karthave En Belane

Karthavae en belanae
Ummil anbu koornthiduvaen (2)
Thurugamum neer kaedagam neer
Ratchannya kombum adaikkalam neer (2)

1. Maranathin kattugal soolntha bothum
Thurchana pravagam puranda bothum (2)
Nerukathin mathiyil kural eluppa (2)
Urukkamaay vanthu uthavi seythaar (2)

2. Thayai seybavanukku neer thayaiyullavar
Uththamanai neer uyarthiduveer (2)
Punithanukku neer punitharanto (2)
Puthiya kirubaiyin uraividamae (2)

3. Ummaalae or senaikkul paayvaen
Ummaalae mathilai thaanduvaen (2)
Sathuruvai naan thodarnthiduvaen (2)
Sathaa kaalamum jeyam eduppaen (2)

4. Ratchannya kaedakam enakku thantheer
Umathu karam ennai uyarthum (2)
Kartharai allaal thaevan illai (2)
Avarae enthan kanmalaiyae (2)

5. Belathinaal ennai iadikkatti
Maangalin kaalglai polaakki (2)
Neethiyin saalvaiyai enakku thanthu (2)
Uyar sthalathil ennai niruthugintar (2)

கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூர்ந்திடுவேன் (2)
துருகமும் நீர் கேடகம் நீர்
இரட்சண்யக் கொம்பும் அடைக்கலம் நீர் (2)

1. மரணத்தின் கட்டுகள் சூழ்ந்த போதும்
துர்ச்சனப் பிரவாகம் புரண்ட போதும் (2)
நெருக்கத்தின் மத்தியில் குரல் எழுப்ப (2)
உருக்கமாய் வந்து உதவி செய்தார் (2)

2. தயை செய்பவனுக்கு நீர் தயையுள்ளவர்
உத்தமனை நீர் உயர்த்திடுவீர் (2)
புனிதனுக்கு நீர் புனிதரன்றோ (2)
புதிய கிருபையின் உறைவிடமே (2)

3. உம்மாலே ஒர் சேனைக்குள் பாய்வேன்
உம்மாலே மதிலைத் தாண்டுவேன் (2)
சத்துருவை நான் தொடர்ந்திடுவேன் (2)
சதா காலமும் ஜெயம் எடுப்பேன் (2)

4. இரட்சண்ய கேடகம் எனக்குத் தந்தீர்
உமது கரம் என்னை உயர்த்தும் (2)
கர்த்தரை அல்லால் தேவன் இல்லை (2)
அவரே எந்தன் கன்மலையே (2)

5. பெலத்தினால் என்னை இடைக்கட்டி
மான்களின் கால்களை போலாக்கி (2)
நீதியின் சால்வையை எனக்குத் தந்து (2)
உயர் ஸ்தலத்தில் என்னை நிறுத்துகின்றார் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram