Parisutharae yengal Yesu deva
Naanilathil Neer yendrum raja (2)
Ummai paaduvathaal yenil tholvi yilai
Ummai thuthipathinaal yenil kuraivae yillai (2)
Hallelujah Hallelujah (2)
Ummai uyarthuvathae
Yengal nokkam Aiya
Ummai paaduvathae
Yengal menmai Aiya (2)
1. Naan konda thitangal sirithaayinum aiya
Yenakaai Um thitangal perithallavo (2)
Puluthiyil irunthennai uyarthineerae
Raajakalodu amarthineerae (2)
Unthan kirubaigalai
Yenni naan paaduvaen
Unthan magimaithanai
Thinam naan rusipaen
2. Ooliya yellaigal perithaakineer
Athil raajakal uthikavum uthavi seitheer (2)
Ariyaatha jaathiyai varavallaitheer
Neer thantha vaakinai niraivetrineer (2)
3. Varuthangal pasithaagam yerpattalum
Yengal visuvaasa kedagam veelnthidaathae (2)
Nambinor nattaatil kaivittalum
Yennai kaapaatra neer undu bayamillayae (2)
பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா
நானிலத்தில் நீர் என்றும் ராஜா (2)
உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை
உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை (2)
அல்லேலூயா அல்லேலூயா (2)
உம்மை உயர்த்துவதே
எங்கள் நோக்கமையா
உம்மை பாடுவதே
எங்கள் மேன்மையையா (2)
1. நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா
எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ (2)
புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே
ராஜாக்களோடு அமர்த்தினீரே (2)
உந்தன் கிருபைகளை
எண்ணி நான் பாடுவேன்
உந்தன் மகிமைதனை
தினம் நான் ருசிப்பேன்
2. ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்
அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர் (2)
அறியாத ஜாதியை வரவழைத்தீர்
நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் (2)
3. வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும்
எங்கள் விசுவாச கேடகம் வீழ்ந்திடாதே (2)
நம்பினோர் நற்றாத்தில் கைவிட்டாலும்
என்னை காப்பற்ற நீர் உண்டு பயமில்லையே (2)