Magimai Matchimai Nirainthavare
Magilvudan tholuthiduvom (2)
Parisutha devanaam yesuvai
Paninthe tholuhuvom
1. Unnatha devan neere
Nyaanam nirainthavare (2)
Mulangaal yaavume
Paaril madangiduthe (2)
Uyarnthavare siranthavare
Endrum tholuthiduvom (2)
2. Oruvarum seraa oliyil
Vaasam seibavare (2)
Oliyinai thanthume
Ithayathil vaasam seiyum (2)
Oliniraive arul niraive
Endrum tholuthiduvom (2)
3. Parisutha devan neere
Paatham paninthiduvom (2)
Kaluviye niruthineere
Sathiyaa devan neere (2)
Ganam magimai seluthiye
Naam endrum tholuthiduvom (2)
4. Nithiyaa devan neere
Neethi nirainthavare (2)
Adaikkalamaanavare
Anbu nirainthavare (2)
Nallavare vallavare
Endrum tholuthiduvom (2)
5. Arputha devan neere
Aaseer alippavare (2)
Agamathil magilnthume
Thuthiyinil pugalnthume (2)
Aaviyodum Unmaiyodum
Entum tholuthiduvom (2)
மகிமை மாட்சிமை நிறைந்தவரே!
மகிழ்வுடன் தொழுதிடுவோம் (2)
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்
1. உன்னத தேவன் நீரே!
ஞானம் நிறைந்தவரே (2)
முழங்கால் யாவுமே
பாரில் மடங்கிடுதே (2)
உயர்ந்தவரே சிறந்தவரே!
என்றும் தொழுதிடுவோம் (2)
2. ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே! (2)
ஒளியினை தந்துமே
இதயத்தில் வாசம் செய்யும் (2)
ஒளிநிறைவே அருள் நிறைவே!
என்றும் தொழுதிடுவோம் (2)
3. பரிசுத்த தேவன் நீரே!
பாதம் பணிந்திடுவோம் (2)
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே! (2)
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம் (2)
4. நித்திய தேவன் நீரே!
நீதி நிறைந்தவரே! (2)
அடைக்கலமானவரே!
அன்பு நிறைந்தவரே! (2)
நல்லவரே வல்லவரே!
என்றும் தொழுதிடுவோம் (2)
5. அற்புத தேவன் நீரே!
ஆசீர் அளிப்பவரே! (2)
அகமதில் மகிழ்ந்துமே
துதியினில் புகழ்ந்துமே (2)
ஆவியோடும் உண்மையோடும்
என்றும் தொழுதிடுவோம் (2)