Enalumae thuthipaay ennaathumaavae, nee
Ennaalumae thuthippaay!
Innaal varaiyilae unnathanaar seytha
Ennillaa nanmaigal yaavu maravaathu
1. Paavangal ethanaiyo, ninaiya thirunthaarun
Paavangal ethanaiyo?
Palaana noyai agatti gunamaakki
Parinil vaitha magaa thaya vai enni
2. Ethanaiyo kirubai, unuyirkku seythaarae
Ethanaiyo kirubai
Nithamunaimudi sootinathumanti,
Naeyamathaaga jeevanai meettathaal
3. Nanmaiyaalun vaayai niraithaarae, poorthiyaay
Nanmaiyaalun vaayai;
Unvayathu kalugaippol palangonndu,
Ongu ilamai polaagavae seythathaal
4. Boomikkum vaanathukkum ulla thooram polavae,
Boomikkum vaanathukkum;
Saami bayamullavar mael avar arul
Saalavum thangumae, sathiya maeyithu
5. Mannipu matchimaiyam mathevanarulum
Mannippu maatchimaiyaam;
Ennuvaayo kilakku maerkin thooramae?
Ennil unpaavam agantathooramae
6. Thanthaithan pillaigatku thayavo dirangano
Thanthaithan pillaigatku
Entha vaelaiyum avarodu thanginaal,
Yetti paaraattiyae thookki sumappaarae
எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்!
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது
1. பாவங்கள் எத்தனையோ, நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றி குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தயவை எண்ணி
2. எத்தனையோ கிருபை, உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
நேயமதாக ஜீவனை மீட்டதால்
3. நன்மையாலுன் வாயை நிறைத்தாரே, பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
ஓங்கு இளமை போலாகவே செய்ததால்
4. பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே,
பூமிக்கும் வானத்துக்கும்;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே, சத்திய மேயிது
5. மன்னிப்பு மாட்சிமையாம் மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்;
எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே?
எண்ணில் உன்பாவம் அகன்றத்தூரமே
6. தந்தைதன் பிள்ளைகட்கு தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்,
ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே