1. Neenga Ninaivugalai Manadhil
Nan Vaithirupen
Kaalam Maraindhalum Idhai Naan
Ennil Thaithirupen
Valkai Thuvangi Kaiyil Ondrum Illamal
Kangal Kalangina Ninaivullathe
Ninaipor Anaipor Yendra Yarum Illamal
Eeram Kasinthen Ninaivullathe
Madiyil Vilundhen Azhudhu Thudithen
Kadhari Vazhkai Podhum Endren
Yethanai Murai En Kangal Thudaithen
Idhuva Vazhkai Podhum Endren
Uravai Nenjathil neer padhindheer
Maganai Sogangal Nan Pagirdhen
Manadhai Vazhkaiyil Uravu Kondeer
Idhuve Podhum Enben
2. Kadinam Thondrum Sila Nimidangalil
Ummai Igalndhu Pagaithu Pirindhirundhen
Nilaigal Thadumarum Nodi Pozhudhil
Ummai Aiyo Aiyo Nogadithen
Manam Vitu Manam Vitu Pesa Vaitheerae
Nenjara En manadhai Paada Vaitheerae
Manam Vitu Yesu Endru Pesa Vaitheerae
Nenjara En Manadhai Paada Vaitheerae
En Vazhvinil Idhu Matuma
Kanavai Vilangum Yekam Anaithum
Ninaivagum Oru Naal Varume
Annaal Yenakai Neer Tharum Anaithum
Ulagam Kandu Viyandhidhume
Uravai Nenjathil neer padhindheer
Maganai Sogangal Nan Pagirdhen
Manadhai Vazhkaiyil Uravu Kondeer
Idhuve Podhum Enben
1. நீங்கா நினைவுகளை மனதில்
நான் வைத்திருப்பேன்
காலம் மறைந்தாலும் இதை நான்
என்னில் தைத்திருப்பேன்
வாழ்க்கை துவங்கி கையில் ஒன்றும் இல்லாமல்
கண்கள் கலங்கின நினைவுள்ளதே
நினைப்போர் அணைப்போர் என்ற யாரும் இல்லாமல்
ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே
மடியில் விழுந்தேன், அழுது துடித்தேன்
கதறி வாழ்க்கை போதும் என்றேன்
எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்
இதுவா வாழ்க்கை போதும் என்றேன்
உறவாய் நெஞ்சத்தில் நீர் பதிந்தீர்
மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்
மனதாய் வாழ்க்கையில் உறவுக் கொண்டீர்
இதுவே போதும் என்பேன்
2. கடினம் தோன்றும் சில நிமிடங்களில்
உம்மை இகழ்ந்து பகைத்து பிரிந்திருந்தேன்
நிலைகள் தடுமாறும் நொடி பொழுதில்
உம்மை ஐயோ ஐயோ நோகடித்தேன்
மனம் விட்டு மனம் விட்டு பேச வைத்தீரே
நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே
மனம் விட்டு இயேசு என்று பேச வைத்தீரே
நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே
என் வாழ்வினில் இது மட்டுமா
கனவாய் விளங்கும் ஏக்கம் அனைத்தும்
நினைவாகும் ஒரு நாள் வருமே
அந்நாள் எனக்காய் நீர் தரும் அனைத்தும்
உலகம் கண்டு வியந்திடுமே
உறவாய் நெஞ்சத்தில் நீர் பதிந்தீர்
மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்
மனதாய் வாழ்க்கையில் உறவுக் கொண்டீர்
இதுவே போதும் என்பேன்