Aar ivar aaraaro - intha
Avaniyor maathidamae
Aanadai kudilidai monamaay uthitha
Ivvarputha baalaganaar
1. Paaruru vaagumunnae - iruntha
Parapporul thaanivaro (2)
Seerudan puvi vaan avai porul yaavaiyunj
Sirushtitha maavalaro? - Aar
2. Maesiyaa ivarthaano - nammai
Maeythidum narargono (2)
Aasaiyaay manitharukaay marithidum athi
Anbulla manasaano? - Aar
3. Thithikkum theenganiyo - namathu
Thaevanin kanmaniyo (2)
Methavae ulagirul neekidum athisaya
Maeviya vinn oliyo - Aar
4. Pattathu thuraimagano - nammai
Panbudan aalbavano (2)
Kattalai meeridum yaavarkum mannippu
Kaatidum thaayagano - Aar
5. Jeevanin appamothaan - thaagam
Theerthidum baanamothaan (2)
Aavalaay aelaigal adainthidum adaikkala
Maanavar ivarthaano - Aar
ஆர் இவர் ஆராரோ – இந்த
அவனியோர் மாதிடமே (2)
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த
இவ்வற்புத பாலகனார் (2)
1. பாருரு வாகுமுன்னே – இருந்த
பரப் பொருள் தானிவரோ (2)
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்
சிருட்டித்த மாவலரோ — ஆர்
2. மேசியா இவர்தானோ – நம்மை
மேய்த்திடும் நரர்கோனோ (2)
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானோ — ஆர்
3. தித்திக்குந் தீங்கனியோ – நமது
தேவனின் கண்மணியோ (2)
மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய
விண் ணொளியோ — ஆர்
4. பட்டத்துத் துரைமகனோ ? – நம்மைப்
பண்புடன் ஆள்பவனோ (2)
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
காட்டிடுந் தாயகனோ — ஆர்
5. ஜீவனின் அப்பமோதான் ? – தாகம்
தீர்த்திடும்பானமோதான் (2)
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல
மானவர் இவர்தானோ — ஆர்