Kuraiyaatha anbu kadal pola vanthu
Niraivaaga ennil alaimothuthae – Antha
Alaimeethu Yesu asainthaadi varavae
Palakodi geetham uruvaaguthae (2)
1. Kanmoodi iravil naan thoongum bothu
Kannaana Yesu enai kaakkintay (2)
Unnai ennaatha ennai ennaalum enni
Mannmeethu vaala vali seygintay
Aa…. naan (2)
2. Adivaanam thontum vidivelli entum
Thodarginta iravin mudivaagumae (2)
Mannil thudikkinta aelai vadikkinta kanneer
Thudaikkinta Yesu arasaagumae
Aa…. naan (2)
3. Irul vanthu soola bayamaevum kaalai
Arul thanthu ennai anaithaaluvaay (2)
Demai sirai kondu endan ulamenum paravai
Sirai meenndu vaala valikaattinaay
Aa… naan (2)
குறையாத அன்பு கடல் போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே – அந்த
அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே (2)
1. கண்மூடி இரவில் நான் தூங்கும் போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் (2)
உன்னை எண்ணாத என்னை
எந்நாளும் எண்ணி
மண்மீது வாழ வழி செய்கின்றாய்
ஆ…. நான் (2)
2. அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே (2)
மண்ணில் துடிக்கின்ற ஏழை
வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு அரசாகுமே
ஆ… நான் (2)
3. இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் (2)
தீமை சிறை கொண்டு எந்தன்
உளமெனும் பறவை
சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய்
ஆ… நான் (2)