Thunai neerae en Yesuvae
Raajanae neer vaarumae
En vaalnaal muluvathum
Enakkellaamae neerae
Thunai neerae en Yesuvae (2)
1. Kaalangal maariyae puriyaamal ponathae
Thunaiyaaga vanthathai kandaen
Enakkaga vantheerae siluvaiyai sumantheerae
Paliyaagi thanthathai kondaen
Ennodu neerae iruntheer
Paathaiyil kooda nadantheer
En paavathai mannitheer
En vaalkkaiyai maattineer
2. Kanneerin paathaiyil kalippaana naerathil
Karangalaal annaithavar neerae
Yaarillaa naerathil thanimaiyin paathaiyil
Thaangiyae vanthavar neerae
Neer ingae illaathirunthaal
En vaalkkai veenaagidumae
Enakkellaamae neer thaanae
Nambuvaen Yesuvae
துணை நீரே என் இயேசுவே
ராஜனே நீர் வாருமே
என் வாழ்நாள் முழுவதும்
எனக்கெல்லாமே நீரே
துணை நீரே என் இயேசுவே (2)
1. காலங்கள் மாறியே புரியாமல் போனதே
துணையாக வந்ததைக் கண்டேன்
எனக்காக வந்தீரே சிலுவையை சுமந்தீரே
பலியாகி தந்ததைக் கொண்டேன்
என்னோடு நீரே இருந்தீர்
பாதையில் கூட நடந்தீர்
என் பாவத்தை மன்னித்தீர்
என் வாழ்க்கையை மாற்றினீர்
2. கண்ணீரின் பாதையில் களிப்பான நேரத்தில்
கரங்களால் அணைத்தவர் நீரே
யாரில்லா நேரத்தில் தனிமையின் பாதையில்
தாங்கியே வந்தவர் நீரே
நீர் இங்கே இல்லாதிருந்தால்
என் வாழ்க்கை வீணாகிடுமே
எனக்கெல்லாமே நீர் தானே
நம்புவேன் இயேசுவே