Aaviyai Arulumae Suvaamy - Enak
Kaayur Kodutha Vaanathinarasae! (2)
1. Narkani Thaedivarum Kaalangal allavoe
Naanoru Kaniyatra Paazhmara Mallavoe
Murkani Muhankaanaa Vempayi Rallavoe
Muzhunenjam Vilaivatra Uvarnila Mallavoe
2. Paavikku Aaviyin Kaniyenuj Snaeham
Parama Santhoesham Neediya Saantham
Thaeva Samaathaanam Narkunam Thayavu
Thida Visuvaasam Sirithenumillai
3. Theebathu Kenneyai Seekkiram Ootrum
Thiriyaviyaamalae Theendiyae Yaetrum
Paava Asuusangal Vilakkiyae Maatrum
Parisuthavaran Thanthen Kuraigalai Theerum
ஆவியை அருளுமே சுவாமீ - எனக்
காயுர் கொடுத்த வானத்தினரசே! (2)
1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ
முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ
முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ
2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்
பரம சந்தோஷம் நீடிய சாந்தம்
தேவ சமாதானம் நற்குணம் தயவு
திட விசுவாசம் சிறிதெனுமில்லை
3. தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும்
திரியவியாமலே தீண்டியே யேற்றும்
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்
பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்