WCF London Logo

World Christian Fellowship

அடைக்கலமே உமதடிமை நானே

Adaikalame Umathadimai Naane

Adaikalame umathadimai naane
Aarparipene agamagilnthe
Karthar neer seytha nanmaigalaiyae
Nitham nitham naan ninaipaenae - 2

1. Alavatra anbinaal anaipavarae
Ennatra nanmaiyaal niraipavarae - 2
Maasillaatha nesarae magimai prathaba
Paasathaal umpaatham patriduvaenae - 2

2. Kartharae um seygaigal periyavaigalae
Sutharae um seyalgal magathuvamaanathae - 2
Nithiyarae um niyaayangal endrum nirkumae
Baktharin paerinba baakkiyamithae - 2

3. Ennai entrum pothithu nadathubavarae
Kannai vaithu aalosanai sollubavarae - 2
Nadakkum valithanai kaattubavarae
Nambi vanthonai kirubai soolnthu kolluthae - 2

4. Karam pattri nadathum karthar neerallo
Kooppitta ennai gunamaakkineerallo - 2
Kuliyil vilaathabadi kaathu konndeerae
Alugaiyai kalippaaga maattivitteerae - 2

5. Paavangalai paaraathennai patri konndeerae
Saabangalai neekki sutha ullam thantheerae - 2
Ratchanyathin santhoshathai thirumba thantheerae
Urchaga aavi ennai thaanga seytheerae - 2

அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே - 2

1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே - 2
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே - 2

2. கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே - 2
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே - 2

3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே - 2
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்து கொள்ளுதே - 2

4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ - 2
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே - 2

5. பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே - 2
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே - 2

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram