1. En jebam ellaam bathilaaga maarum
En kaathiruppo oru naalum veenaagaadhu
Varanda nilam neeruttraai maarum
Perum mazhai pozhindidum neram idhu (2)
En thudiyellaam jeyamaaga maarum
Maatrangalai undaakkum maaradhavar
Pettriduvoam visuvaasathaal
Jebithathaiyum izhandhathaiyum irattippaaga
Naam ninaippadharkkum vaenduvadharkkum
Melaai melaai nanmai seivaar
Naan vetkappatta naatkalukku
Eedaai eedaai nanmai seivaarPariboorana jeevan neer paraakkiramame
Jothigal-in Pithaave manam irangum (2)
Ithuvarai nanmai seithavar
Inimelaa theemai seivaar? (4)
2. Namakkaaga yuthangalai seibavar
Saenaigalin Devan avar thotradhe illai
Theemaigalai nanmaiyaaga maatruvaar
Nanmaigalin Devan avar nanmai seivaar
Thadaipatta kaariyangal niraiverum
Manidaraal koodaadhavai Devanaal koodum
Theengugal en koodaarathai anugaadhu
Nanmaiyum kirubaiyum ennai thodarum
Naam ninaippadharkkum vaenduvadharkkum
Melaai melaai nanmai seivaar
Naan vetkappatta naatkalukku
Eedaai eedaai nanmai seivaarPariboorana jeevan neer baraakkiramame
Jothigalin Pithaave manam irangum (2)
Idhu naan aaradikkum Devan
Idhilum melaanadhai seivaar (4)
1. என் ஜெபம் எல்லாம் பதிலாக மாறும்
என் காத்திருப்போ ஒரு நாளும் வீணாகாது
வறண்ட நிலம் நீருற்றாய் மாறும்
பெரும் மழை பொழிந்திடும் நேரம் இது (2)
என் துதியெல்லாம் ஜெயமாக மாறும்
மாற்றங்களை உண்டாக்கும் மாறாதவர்
பெற்றிடுவோம் விசுவாசத்தால்
ஜெபித்ததையும் இழந்ததையும் இரட்டிப்பாக
நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மேலாய் மேலாய் நன்மை செய்வார்
நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு
ஈடாய் ஈடாய் நன்மை செய்வார்பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமே
ஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும் (2)
இதுவரை நன்மை செய்தவர்
இனிமேலா தீமை செய்வார்? (4)
2. நமக்காக யுத்தங்களை செய்பவர்
சேனைகளின் தேவன் அவர் தோற்றதே இல்லை
தீமைகளை நன்மையாக மாற்றுவார்
நன்மைகளின் தேவன் அவர் நன்மை செய்வார்
தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்
மனிதரால் கூடாதவை தேவனால் கூடும்
தீங்குகள் என் கூடாரத்தை அணுகாது
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்
நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
மேலாய் மேலாய் நன்மை செய்வார்
நான் வெட்கப்பட்ட நாட்களுக்கு
ஈடாய் ஈடாய் நன்மை செய்வார்பரிபூரண ஜீவன் நீர் பராக்கிரமமே
ஜோதிகளின் பிதாவே மனம் இரங்கும் (2)
இது நான் ஆராதிக்கும் தேவன்
இதிலும் மேலானதை செய்வார் (4)