Kartharai uyarthidum kaalam
Idhu nandriyaal thudithidum neram
Deva vaarthaiyai nambidum yaarum
Kirubaiyai kondaadiduvom
1. Odhukappatta ennai saerthu kondeer
Thallappatta ennai anaithu kondeer
Kaetadhai thanthitteer aaseervadhithiteer
Kaetka marandhadhaiyum saerthu koduthitteer
2. Balaveena nerathil sumandhu kondeer
(En) tholviyin nerathil thol kodutheer
Idhuvaraikkum kaathavar inimelum kaathiduveer
Entra nichayathai enakku thantheer
3. Tholvi illai enakku thoyvum illai
Evarai kandum enakku bayamum illai
Alaitha aandavar ennodu irukka
Orubodhum asaikkappaduvadhillai
கர்த்தரை உயர்த்திடும் காலம்
இது நன்றியால் துதித்திடும் நேரம்
தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்
கிருபையை கொண்டாடிடுவோம்
1. ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக் கொண்டீர்
தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர்
கேட்டதை தந்திட்டீர் ஆசீர்வதித்திட்டீர்
கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர்
2. பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்
(என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர்
இதுவரைக் காத்தவர் இனிமேலும் காத்திடுவீர்
என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர்
3. தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை
எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை
அழைத்த ஆண்டவர் என்னோடு இருக்க
ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை