Kirubaiyithae thaeva kirubaiyithae (2)
Thaangi nadathiyathae
Yesuvilae pon naesarilae
Agamagilnthae naam aananthippom (2)
1. Aaruyir anbaraay engaludanae
Jeeviya paathaiyilae - Yesu baran (2)
Anuthinamum vali nadanthae
Avarathu naamathil kaathanarae (2)
2. Ehanayo parisuthargal marainthe
Magimai sernthanare - Pooranamai (2)
Kathanare karthar emai
Karunayinal thooya sevai seiya (2)
3. Anbin agalamum neelam uyaramum
Aalamum arinthunara - Anukkiragithaar (2)
Kiristhuvilae oru manaiyaay
Sirushtithae niruthinaar avar sutharaay (2)
4. Nalla poraattam poraadi jeyithae
Nithiya jeevanai naam - Pettidavae (2)
Visuvaasathil nilaithiduvom
Asaiyaathu alaippinai kaathu kolvom (2)
5. Aaviyum manavaattiyum aavaludan
Vaarumentalaikkintarae - Vaarumenbeer (2)
Seeyonae nee paar unakkaay
Naayagan Yesu thaam velippaduvaar (2)
6. Vaarthaiyinaal avar theerthaar enthan
Viyaathiyum vaethanaiyum - Vaithiyaraay (2)
Yesuvallaal saarnthidavo
Igamathil vaerama kaarumillai (2)
கிருபையிதே தேவ கிருபையிதே (2)
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் (2)
1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவிய பாதையிலே – இயேசுபரன் (2)
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே (2)
2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே
மகிமை சேர்ந்தனரே – பூரணமாய் (2)
காத்தனரே கர்த்தர் எமை
கருணையினால் தூய சேவை செய்ய (2)
3. அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார் (2)
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் (2)
4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் – பெற்றிடவே (2)
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினை காத்துகொள்வோம் (2)
5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே – வாருமென்பீர் (2)
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் (2)
6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் – வைத்தியராய் (2)
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை (2)