Maankaalgaḷai Thandheeraayaa
Mathilgaḷai thaandiduven
Ninaithu paarkaatha uyarangaṭkaai
Nithamum nandri solven (2)
Nandri Nandri Nandri Nandri Nandri
Nitham oyaamal paaduven nandri
Nandri Nandri Nandri Nandri Nandri
Nitham soraamal paaduven nandri
1. Theengu seiyya ninaithavar mun
Thazhaithida seythavarae
Thadumaariṉa velaiyaḷellam
Thaangiyae nadathineerae (2)
En pakkam nizhalaai nintravarae
En paatham idaraamal sumandhavarae (2)
2. Sirumaippaṭṭa kaalamellam
Sitharaamal kaathavarae
Seer kulaintha en thittamellam
Seer amaithu thandhavarae (2)
Sagalathaiyum nee thiruppi kolvaai
Endru sonnathai niraivaetrineer (2)
3. Ethirthu vantha jala pravaagam
Anugida vida villaiyae
Thurathi vantha jana koottangal
Azhithida vida villaiyae (2)
Ratchanya paadalgaḷ soozha seythreer
Ratchagar neer endru aṛiya vaitheer (×2)
மான் கால்களை தந்தீரையா
மதில்களை தாண்டிடுவேன்
நினைத்து பார்க்காத உயரங்கட்காய்
நித்தமும் நன்றி சொல்வேன் (2)
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் ஓயாமல் பாடுவேன் நன்றி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நித்தம் சோராமல் பாடுவேன் நன்றி
1. தீங்கு செய்ய நினைத்தவர் முன்
தழைத்திட செய்தவரே
தடுமாறின வேளையெல்லாம்
தாங்கியே நடத்தினீரே (2)
என் பக்கம் நிழலாய் நின்றவரே
என் பாதம் இடறாமல் சுமந்தவரே (2)
2. சிறுமைப்பட்ட காலமெல்லாம்
சிதறாமல் காத்தவரே
சீர்குலைந்த என் திட்டமெல்லாம்
சீர் அமைத்து தந்தவரே (2)
சகலத்தையும் நீ திருப்பி கொள்வாய்
என்று சொன்னதை நிறைவேற்றினீர் (2)
3. எதிர்த்து வந்த ஜல பிரவாகம்
அணுகிட விடவில்லையே
துரத்தி வந்த ஜன கூட்டங்கள்
அழித்திட விடவில்லையே (2)
இரட்சண்ய பாடல்கள் சூழ செய்தீர்
இரட்சகர் நீர் என்று அறிய வைத்தீர் (2)