Magilvom Magilvom thinam aga magilvom
Yesu raja nam sonthamayinaar
Intha paarthalathil sonthakararavar
enthan ullathil sonthamanar (2)
Aa aananthame paramananthame
ithu maa berum bakkiyame
Intha paarthalathil sonthakararavar
enthan ullathil sonthamanar (2)
1. Chinanchiruvayathil enai kurithuvitar
Thuram poyenum kandukondar
Thamathu jeevanai enakum alithu
Jeevan petrukkol endruraithar (2)
2. Yentha soolnilaiyum avar anbinindru
Ennai pirikaathu kathukolvar
Ennai nambiavar thantha porupathanai
Avar varum varai kathu kollven (2)
3. Avar varum nallilae enai karam asaithu
anbaai kupituu seirthukolvar
Avar samugamathil angay aavarudanay
aadi paadiyay magilthiduven (2)
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் (2)
ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் (2)
1. சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் (2)
2. எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் (2)
3. அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன் (2)