Paathagan en vinaitheer aiyaa
Kirubaagaraa nin
Paadu ninain thenai ser aiyaa (2)
Theethagattavae sirantha
Sen ulaginimai vittu,
Poothalg thukanthu vantha
Punniyanae, yaesu thaevaa
1. Vanthurum epavigalaiyum
Angegarikkum
Maasillaatha yaesu naathanae (2)
Unthan idam vanthulamae
Urugi aluthamaathu
Munthimiga seytha paavam
Muluthum poruthaay anto?
2. Sinthina un uthiram athae
Theeyon marathai
Sinapinnam seyya vallathae; (2)
Pantham ura untan vala
Paakaamutta kalvanaiyae
Vinthaiyura vaeratchitha
Vaethanae, avvithamaayae
3. Arpavisuvaasamulan aam
Adiyaenai ini
Aatharippathaar? un thanjamae; (2)
Tharparaa, unai tharisi thanti
Nambidaen, enavae
Seppina thomaavukkuppol,
Thiru urukkaatchi thanthu
பாதகன் என் வினைதீர் ஐயா
கிருபாகரா நின்
பாடு நினைந் தெனைச் சேர் ஐயா (2)
தீதகற்றவே சிறந்த
சேண் உலகினிமை விட்டு,
பூதலத் துகந்து வந்த
புண்ணியனே, யேசு தேவா
1. வந்துறும் எப்பாவிகளையும்
அங்கீகரிக்கும்
மாசில்லாத யேசு நாதனே (2)
உந்தன் இடம் வந்துளமே
உருகி அழுதமாது
முந்திமிகச் செய்த பாவம்
முழுதும் பொறுத்தாய் அன்றோ?
2. சிந்தின உன் உதிரம் அதே
தீயோன் மறத்தைச்
சின்னபின்னம் செய்ய வல்லதே; (2)
பந்தம் உற உன்றன்
வலப் பாகாமுற்ற கள்வனையே
விந்தையுற வேரட்சித்த
வேதனே, அவ்விதமாயே
3. அற்பவிசுவாசமுளன் ஆம்
அடியேனை இனி
ஆதரிப்பதார்? உன் தஞ்சமே; (2)
தற்பரா, உனைத் தரிசித்
தன்றி நம்பிடேன், எனவே
செப்பின தோமாவுக்குப்போல்,
திரு உருக்காட்சி தந்து