Siluvaiyil nilalil anuthinam adiyaan
Saynthilai paariduvaen – Aa Aa (2)
Siluvaiyin anbin maraivil
Kirubaiyin iniya nilalil (2)
Aathuma naesarin arugil (2)
Adaigiraen aaruthal manathil
1. Paava paara chumaiyathaal sornthu
Thalarnthen jeeviyamae - Aa Aa (2)
Siluvaiyanndai vanthathinaal
Sirantha santhoshan kandathinaal (2)
Ilaippadaiyaathu maelogil
Aeguvaen paranthae vaegam
2. Evvitha kotiya idarukkum anjaen
Aesuvai saarnthu nirpaen – Aa Aa (2)
Avaniyil viyaagulam vanthaal
Avaraiyae naan anndi konndaal (2)
Alaimiga mothidum annaal
Aaruthal alippathaay sonnaar
3. Inbam suranthidum thirumoli kaettae
Innalgal maranthiduvaen – Aa Aa (2)
Thirumarai innisai naatham
Thaeniluminiya vaetham (2)
Tharumenakkanantha santhosham
Theerkkumen ithayathin thosham
சிலுவையில் நிழலில் அனுதினம் அடியான்
சாய்ந்திளைப் பாரிடுவேன் – ஆ ஆ (2)
சிலுவையின் அன்பின் மறைவில்
கிருபையின் இனிய நிழலில் (2)
ஆத்தும நேசரின் அருகில் (2)
அடைகிறேன் ஆறுதல் மனதில்
1. பாவப் பாரச்சுமையதால் சோர்ந்து
தளர்ந்தென் ஜீவியமே - ஆ ஆ (2)
சிலுவையண்டை வந்ததினால்
சிறந்த சந்தோஷங் கண்டதினால் (2)
இளைப்படையாது மேலோகில்
ஏகுவேன் பறந்தே வேகம்
2. எவ்வித கொடிய இடருக்கும் அஞ்சேன்
ஏசுவை சார்ந்து நிற்பேன் – ஆ ஆ (2)
அவனியில் வியாகுலம் வந்தால்
அவரையே நான் அண்டிக் கொண்டால் (2)
அலைமிக மோதிடும் அந்நாள்
ஆறுதல் அளிப்பதாய்ச் சொன்னார்
3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டே
இன்னல்கள் மறந்திடுவேன் – ஆ ஆ (2)
திருமறை இன்னிசை நாதம்
தேனிலுமினிய வேதம்
தருமெனக்கனந்த சந்தோஷம்
தீர்க்குமென் இதயத்தின் தோஷம்