Siragugalin nilalthanile naan
Nambi ilaipparuven
Neer thunaiyai iruppadhinal naan
Endrum ilaipparuven
Kanmani pola ennai kaapavarai naan
Nambi ilaipparuven
Kan urangamal kaapavarai naan
Nambi ilaipparuvenMaraividame aaraadhanai
Uraividame umakku aaraadhanai
Adaikkalame aaraadhanai
Pugalidame umakku aaraadhanaiAaraadhanai umakku aaraadhanai
Ennai nesikkum Yesuve aaraadhanai
Aaraadhanai umakku aaraadhanai
Ennai aadharikkum Yesuve aaraadhanai
1. Pakkathil aayiram ber vizhundhaalum
Ennai anugaamaal kaappavare
Valapakkathil pathinaayiram vilundhaalum
Ennai anugaamaal kaappavare
Adaikkalamana en thaabarame
Ennai anugaamaal kaappavare
2. Ichagam pesidum naavugal munnile
Ennai kaappavare
Nanmaikku kaimaaray theemai seyvor mathiyil
Ennai kaappavare
Dhurogangal niṟaintha boomiyile
Thunai nintru kaappavare
Thevittaamal nesikkum en nesare
Ennai endrum kaappavare
சிறகுகளின் நிழல்தனிலே நான்
நம்பி இளைப்பாறுவேன்
நீர் துணையாய் இருப்பதனால் நான்
என்றும் இளைப்பாறுவேன்
கண்மணி போல என்னை காப்பவரை நான்
நம்பி இளைப்பாறுவேன்
கண் உறங்காமல் காப்பவரை நான்
நம்பி இளைப்பாறுவேன்மறைவிடமே ஆராதனை
உறைவிடமே உமக்கு ஆராதனை
அடைக்கலமே ஆராதனை
புகலிடமே உமக்கு ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனை
என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை
ஆராதனை உமக்கு ஆராதனை
என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை
1. பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்
என்னை அணுகாமல் காப்பவரே
வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்
என்னை அணுகாமல் காப்பவரே
அடைக்கலமான என் தாபரமே
என்னை அணுகாமல் காப்பவரே
2. இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே
என்னை காப்பவரே
நன்மைக்கு கைமாறாய் தீமை செய்வோர் மத்தியில்
என்னை காப்பவரே
துரோகங்கள் நிறைந்த பூமியிலே
துணை நின்று காப்பவரே
தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே
என்னை என்றும் காப்பவரே