Um neethiyai solla oru naavu podhaadhe
Neer seydhadhai solla indha aayul podhaadhe
Indru ennil kaanbadhellaam
Ummaalthaane vandhadhu
Yesuve en vaalvhin arthame
Um magathuvathai solli thudhippen
1. Neer varum munne naan illaamal irundhen
Neer vandha pinnaley uyir petru vaazhgiren
Poochiyana ennai puthidhum koormaiyumaakki
Bayanbaduthuginteer Neer magimai paduginteer
Um kirubai peridallavo
Um magathuvathai solli thudhippen
2. Meichalai kaana en Meyparaneere
Neerpaaichalaana thoattathaipol ennai vaitheere
Migudhiyana kanigal ennil velippadutha
Panbaduthuginteer Neer paadhugaakinteer
Um kirubai peridallavo
Um magathuvathai solli thudhippen
உம் நீதியை சொல்ல ஒரு நாவு போதாதே
நீர் செய்ததை சொல்ல இந்த ஆயுள் போதாதே
இன்று என்னில் காண்பதெல்லாம்
உம்மால்தானே வந்தது
இயேசுவே என் வாழ்வின் அர்த்தமே
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன்
1. நீர் வரும் முன்னே நான் இல்லாமலிருந்தேன்
நீர் வந்தபின்னாலே உயிர் பெற்று வாழ்கிறேன்
பூச்சியான என்னை புதிதும் கூர்மையுமாக்கி
பயன்படுத்துகின்றீர் நீர் மகிமை படுகின்றீர்
உம் கிருபை பெரிதல்லவோ
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன்
2. மேய்ச்சலை காண என் மேய்ப்பரானீரே
நீர்பாய்ச்சலான தோட்டத்தைப்போல் என்னை வைத்தீரே
மிகுதியான கனிகள் என்னில் வெளிப்படுத்த
பண்படுத்துகின்றீர் நீர் பாதுகாக்கின்றீர்
உம் கிருபை பெரிதல்லவோ
உம் மகத்துவத்தை சொல்லி துதிப்பேன்