WCF London Logo

World Christian Fellowship

ஏழை மனு உருவை எடுத்த

Yelai Manu Uruvai Edutha

Yelai manu uruvai edutha
Yesu Raajan unandai nirkiraar
Etru kol avarai thalladhe (2)

1. Kaigalil kaalgalil aanigal kadaava
Kadum mul mudi pon sirasil soodida (2)
Gandhaiyum nindhaiyum vedhanaiyum sagithaar
Sonthamaana ratham sindhinaar unakkai
Kanivudaney unnai alaikiraare (2)

2. Avar thalaiyum saaykavo sthalamumillai
Andru thaagathai theerkavo baanamumillai (2)
Aaruthal sollavo ange oruvarum illai
Arumai Ratchagar thongugiraar thaniye
Andha paadugal unnai meetkave (2)

3. Innamum thaamatham unakken magane
Inba Yesuvandai elundhu vaaraayo (2)
Indha ulagam tharakoooda samaadhaanathai
Indru unakku thara kaathu nirkiraare
Annal Yesu unnai alaikkiraare (2)

4. Avar maranathaal saathaanin thalai nasunga
Avar rathathaal paava karaigal neenga (2)
Unthan viyaathiyin vedhanaiyum oliya
Neeyum saabathinindru vidudhalai adaiya
Siluvaiyil jeyithaar yaavaiyum (2)

5. Maaya ulagam athaiyum nambaadhe
Manumakkal manamum maari pogume (2)
Nithiya Devanai nesithaal ippodhe
Nichayam santhosham petru nee magizha
Nambikkaiyodae vandhiduvaai (2)

ஏழை மனு உருவை எடுத்த
இயேசு ராஜன் உன்னண்டை நிற்கிறார்
ஏற்றுக் கொள் அவரைத் தள்ளாதே (2)

1. கைகளில் கால்களில் ஆணிகள் கடாவ
கடும் முள் முடி பொன் சிரசில் சூடிட (2)
கந்தையும் நிந்தையும் வேதனையும் சகித்தார்
சொந்தமான இரத்தம் சிந்தினார் உனக்காய்
கனிவுடனே உன்னை அழைக்கிறாரே (2)

2. அவர் தலையும் சாய்க்கவோ ஸ்தலமுமில்லை
அன்று தாகத்தைத் தீர்க்கவோ பானமுமில்லை (2)
ஆறுதல் சொல்லவோ அங்கே ஒருவரில்லை
அருமை ரட்சகர் தொங்குகிறார் தனியே
அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே (2)

3. இன்னமும் தாமதம் உனக்கேன் மகனே
இன்ப இயேசுவண்டை எழுந்து வாராயோ (2)
இந்த உலகம் தரக்கூடா சமாதானத்தை
இன்று உனக்கு தரக் காத்து நிற்கிறாரே
அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறாரே (2)

4. அவர் மரணத்தால் சாத்தானின் தலை நசுங்க
அவர் ரத்தத்தால் பாவக் கறைகள் நீங்க (2)
உந்தன் வியாதியின் வேதனையும் ஒழிய
நீயும் சாபத்தினின்று விடுதலை அடைய
சிலுவையில் ஜெயித்தார் யாவையும் (2)

5. மாய உலகம் அதையும் நம்பாதே
மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே (2)
நித்திய தேவனை நேசித்தால் இப்போதே
நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ
நம்பிக்கையோடே வந்திடுவாய் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram